வைரஸ் தாக்கிய Pen Drive ஒன்றிலிருந்து file களை மீட்க simple வழி!
தற்பொழுது தகவல்களைச் சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB Pen Drives. இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக Pen Drive ல் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களைப் பாதிக்கின்றது.
தற்பொழுது தகவல்களைச் சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB Pen Drives. இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக Pen Drive ல் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களைப் பாதிக்கின்றது.
இப்படிப் பாவிக்கும் பொழுது உங்கள் Pen Drive ல் உள்ள folders சிலவேளைகளில் மறைக்கப்பட்டு விடும். கணனியில் Pen drive ஐ ஓப்பன் செய்தால் எந்த folder களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. Pen Drive ல் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து pen Drive ஐத் திரும்பப் பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்தப் பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை. உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் Pen Drive ஐ உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start --> Run --> cmd--> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது Pen Drive எந்த ட்ரைவில் உள்ளது எனப் பாருங்கள். My Computer ஐ open
பண்ணுவதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக, E: டிரைவில் Pen Drive இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதற்கு நீங்கள்
E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) தற்போது E-prompt இல் attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள். ஒவ்வொரு பகுதிக்கும்
Space சரியாகக் கொடுக்கவும். இங்கு -,h என்பவற்றுக்கிடையில் space இல்லை. அதேபோல் /,s
என்பவற்றுக்கிடையிலும் space இல்லை.
◦ நீங்கள் சரியாகக் கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter key ஐ அழுத்துங்கள்.
◦ சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென் ட்ரைவைச் சோதித்துப்
பாருங்கள். உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
இது ஒரு உபயோகமான தகவல் என்று நீங்கள் நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்.... ;)